இன்பப் பொங்கல்



         இன்பப் பொங்கல்

    நாமக்கல் கவிஞர்         

முன்னுரை  :

         காந்திய கவிஞர் என அழைக்கப்பட்டு பாரதம் போற்றும் மகாகவிகளில் ஒருவராக இருந்து பல கவிதைகளை புனைந்தவர் நாமக்கல் கவிஞர். இவர் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை இயற்றினாலும் தமிழரின் பாரம்பரிய பொங்கல் விழா பற்றி எவ்வாறு கவிதை புனைந்துள்ளார் என்பதை இக்கட்டுரை மூலம் காணலாம் ..

பொங்கல் விழா:

பொங்கல் எனும்பொழுதில்--இன்பம் பொங்குது துன்பங்கள் மங்கி மறைந்திடும் மங்களச் சொல்அதிலோர்--தெய்வ மந்திரம் உண்டெனச் சிந்தை களித்திட எங்கள் தமிழ்நாட்டில்--மிக்க ஏழையும் செல்வரும் தோழமை எய்திடும் இங்கிதம் கண்டிடும்நாள்!--பலர் எங்கும் புகழ்ந்திட உங்கள் குடித்தனம் பொங்குக பொங்குக பால்!

பொங்கல் என்றாலே இன்பம் . இந்நாளில் மக்களின் மனதிலும் வாழ்விலும் இன்பம் பொங்கி துன்பம் மறையும் .பாரம்பரிய, பண்பாடுகளோடு தெய்வீக தன்மையும் இணைவதால் மனம் மகிழும் . சீர்மிகு தமிழ்நாட்டில் ஏழை செல்வந்தர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் ஒற்றுமையோடு கொண்டாடும் பெருநாள் இப்பொங்கல் திருநாள் . இத்தனை சிறப்புடைய திருநாளைக் கொண்டாடும் தமிழர்களே உங்களது புகழ் உலகம் முழுவதும் புகழ்ந்திட பொங்குக பொங்கலே!!!

விழா ஏற்பாடு

வெள்ளை அடித்திடுவோம்-எங்கள் வீடுகள் வாசலில் கூடிய மாசுகள் 

அள்ளி எறிந்துவிட்டு--மிக 

அற்புதச் சித்திரம் பற்பல வானங்கள் புள்ளிகள் கோலமிட்டுத்-தெய்வ பூசனைத் தீபங்கள் வாசனைத் தூபங்கள் உள்ளத்திலும்புகுந்தும்-அங்கே ஊறிய தீமைகள் மாறுதல் செய்திடும் 

சீருடைப் பொங்க லிதாம்!

எங்கள் வீடுகளுக்கு புது வண்ணம் தரும் வெள்ளை அடித்திடுவோம். வீடுகளில் உள்ள மாசுகளை சேகரித்து எரித்திடுவோம்.(போகி பண்டிகை) ,பல வண்ணங்களில் கோலம் போட்டு நாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களோடு தீப ஆராதனைகள் செய்து வணங்குவோம்

உயிரினங்களும் உறவுகளே:

மாடுகள் நாய்குதிரை-ஆடும் மக்களைப் போலவே ஒக்கும் உயிரென்று நாடும் நினைவுவந்து--பொங்கல் நாளில் அவைகளின் தாளில்

 தளையின்றித் தேடும் உரிமைதந்து-முற்றும் 

தேய்த்துக் குளிப்பாட்டி நேர்த்தி யுறமலர் சூடின தாகச்செய்வோம்-அதில் தோன்றும் கருணையை ஊன்றி நினைத்திட ஏன்றது இந்தப் பொங்கல்!

எங்கள் வாழ்விற்கு உதவும் மாடு, நாய், குதிரை ,ஆடு போன்ற உயிரினங்களை மனிதர்களாகவே எண்ணி பாசம் கொண்டு பொங்கல் நாளில் அவற்றை தேய்த்து குளிப்பாட்டி பல வண்ண பொடிகளையும் , மலர்களைச் சூடி அன்போடு அரவணைத்து பாசம் காட்டி நன்றி கூறும் விதமாக அமைந்தது இந்த பொங்கலை! !

வீர விளையாட்டு :

அஞ்சும் மனத்தவரும்- கொஞ்சம் ஆண்மை தருமனப் பான்மை யடைந்திட மஞ்சு விரட்டிடுவோம்--துஷ்ட.       மாட்டையும் அடக்கும் தாட்டிகம் காட்டுவம் வஞ்சனை மோசங்களும்-தங்கள் வாடிக்கை விட்ட வேடிக்கை பார்த்து கொஞ்சி மகிழ்ந்திடும்நாள்!-- மைந்தர் கூட்டமும் பந்தய ஓட்டமும் மங்களப் பாட்டும் மிகுந்த பொங்கல்!

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் போன்ற திருவிழா நேரங்களில் அச்சம் சிறிதுமின்றி ஆண்கள் அனைவரும் வாடிவாசலில் இறங்கி காளைகளை அடக்குவோம். அடங்கா காளைகளையும் அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் இந்நிகழ்வை பல கோடி மக்கள் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தவர். இந்த விழாவில் மைந்தர் பந்தய ஆட்டமும் ஓட்டமும்மாக இன்பத்தோடு  இருப்பர். 

துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும் :

மங்கள வாழ்வுபெற்று-மக்கள் 

மாச்ச ரியம்தரும் ஏச்சுக ளைவிட்டு எங்கள் திருநாட்டில்--இனி 

ஏழ்மையும் யாருக்கும் தாழ்மையும் நீங்கிடச் 

செங்கை சிரங்கூப்பித்--தெய்வ. சிந்தனை யிற்பல வந்தனை பாடிஇப் பொங்கலை வாழ்த்திடுவோம்--இந்தப் பூதலம் யுத்தத்தின் வேதனையாற் படும் தீதறப் பொங்குக பால்!

மங்கள வாழ்வு பெற்ற தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களும், ஏழ்மையும் நீங்கி அவர்களின் சிந்தனையில் பல நல்ல எண்ணங்கள் தோன்றி இன்பம் பொங்கிட வாழ்த்துக்கள் பாடி இப் பொங்கலை வணங்கி வாழ்த்தி வரவேற்போம் . இந்த உலகம் துன்பங்களிலிருந்து நீங்கி பெரும் இன்பம் பெற பொங்குக பால் பொங்கலே..

கருத்துகள்