முன்னுரை
உலகத்தின் நலங்கள் எல்லாம் இயற்கையின் கொடை. அவற்றைப் பயன்தர உருச்சமைத்தனர் தொழிலாளத் தோழர்கள். அத்தகைய தொழிலாளர்களுக்கு சமநிலை கிடைக்க வேண்டுமென்று விரும்பி "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் ”என்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூற விரும்பும் அறிவுரை. சமுதாயத்தில் எப்பாடு பட்டேனும் சமநிலையைக் கொண்டுவந்து விட வேண்டும் என்று விரும்பினார். ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடக்கும் ஏழைகளின் நிலையை எடுத்துரைக்கும் வன்மை மிக்க குரலாக அவர் குரல் தொழிலாளர் விண்ணப்பம் என்னும் கவிதையில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை காணலாம் ...
பாடல்: 1
காடு களைந்தோம் - நல்லகழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம் வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
காடுகளை வெட்டி அவற்றை நல்ல வயல் நிலங்களாக மாற்றி உழவு செய்து காடுகளை செழிப்பு மிக்க நாடாக்கினோம். நாட்டிலுள்ள நாற் திசைகளையும் அழகாக தோற்றம் பெற செய்து எங்கும் வீடுகள் கட்டினோம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான பண்டங்களை உருவாக்க தினம்தினம் பாடுபட்டோம். புவி அழகுபெற மக்கள் இன்பமுற்று இருக்கவும் நாங்கள் (தொழிலாளர்கள்) தினம் தினம் உழைத்தோம்.
பாடல்: 2
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன்
எடுத்தோம் உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுன் தந்தோம்.
பாடல்: 3
ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றலை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தொம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்த செயலில்
நிறைந்த முகத்தெதிர் வைத்தோம்.
பாடல்: 4
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வயத்தில் இந்த நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் -
குப்பை இலைஎன்ன வேங்கைகள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.
பாடல்: 2
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன்
எடுத்தோம் உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுன் தந்தோம்.
மலைகளை பிளந்தோம் ,புவி செழிக்கவே பல கப்பல் கட்டினோம். கப்பல் பல செல்லவே கடலை ஆழம் செய்து பல தொல்லையுற்றோம். தங்கச் சுரங்கங்கள் பல தோண்டினோம் ,இரும்பு உருக்கு ஆலையில் இரும்பை உருக்கி பல இயந்திரங்கள் செய்தோம்.
பாடல்: 3
ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றலை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தொம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்த செயலில்
நிறைந்த முகத்தெதிர் வைத்தோம்.
ஆடைகள் நெய்தோம், எங்கள் ஆற்றலால் நிலம் திருத்தி நெல் நாற்றுக்கள் நட்டோம் .கூடை பின்னுதல் முதல் கோபுரகட்டும் கட்டிட வேலைகள் செய்தோம் .கோடை வெயில் இருந்து உங்களைக் காக்க பல நிழல் கூடங்களையும், நல்ல சாலைகளும் அமைத்து நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம்.
பாடல்: 4
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வயத்தில் இந்த நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் -
குப்பை இலைஎன்ன வேங்கைகள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.
வாழ்விற்கு ஒவ்வாத வேலைகள் அனைத்தையும் நாங்கள் செய்தோம். ஆழ்கடல், காடு ,மலை என அத்தனையிலிருந்தும் கனிம வளங்களை வெட்டி எடுத்தோம். குப்பை அசுத்தங்களையும் எச்சில் இலைகளையும் எங்கள் தலையில் சுமந்து அகற்றினோம். இத்தனை வேலைகளைச் செய்யும் எங்கள் பெயர் புவி தொழிலாளர்கள் நாங்கள் படும் இன்னல்களை கேளிர் .
பாடல்: 5
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
கிழிந்த ஆடைகள் அணிந்து ,எங்கள் கைகளை கொண்டு உடம்பினை மறைத்தோம்.பற்றாத கூழை பலர் சேர்ந்து குடித்து தினம்தினம் பசியோடு கிடந்தோம் .சந்தை மாடுகளைப் போல நாங்கள் தங்குவதற்கு இடமின்றி சாலையோரங்களில் தங்கி உடல் மெலிந்தோம் . மக்களே கேளுங்கள் எங்கள் சேவைகெல்லாம் நீங்கள் செய்யும் செய்நன்றி இதுதானா? .
பாடல்: 6
மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!
மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!
பொய்யின் தலைவரே, இந்த மண்ணை வளைத்து சொத்து சேர்த்துள்ள அண்ணன்மாரே , சூழ்ச்சிகள் பல செய்து பெரும் கொள்ளை அடித்த கோடீஸ்வரர்களே, எங்களைப் போன்ற ஏழை எளிய தொழிலாளர்களை வதக்கி பிழிந்து வடிகட்டி சொத்து சேர்த்து எங்களைத் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டீர்களே, நிதியின் வளர்ச்சியால் நிலங்களையும் நீங்கள் கையகப்படுத்தி விட்டீர்களே.
பாடல்: 7
செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செயகத்தொழி தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்த உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம்
கொடிப்பேறு முன்பே ஒப்படைப்பீரே
செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செயகத்தொழி தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்த உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம்
கொடிப்பேறு முன்பே ஒப்படைப்பீரே
நாங்கள் சொல்வதைக் கேளீர் ,இந்த உலகத்தில் தொழிலாளர்கள் மிகப்பலர் இனியும் உங்களை தொழுது வணங்கி இருப்போம் என்று மதித்திடாமல் இருக்க வேண்டாம் .இப்பொழுதே நீங்கள் உங்களுக்கு இன்பம் விளைவித்த பொது சொத்தையும் அளவுக்கு மீறிய உங்கள் சொத்தையும் ஒப்படையுங்கள் .
எங்கள் உடலில் ஓடும் இரத்தம் கொதித்துப்
புரட்சிகள் எழும் முன்பே ஒப்படையுங்கள் ...
ப.பாலமுருகன்
கருத்துகள்
கருத்துரையிடுக