ஜெயகாந்தன் அறிமுகம்
முன்னுரை:
ஞானபீட விருது சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியங்கள் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.பல்வேறுபட்ட தன்மை உடைய ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து அறிவதே இவ்வியலின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
பிறப்பு:
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணி பிள்ளை மகாலட்சுமி அம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையினால் ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெற வேண்டி வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார்.
அங்கு அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ.யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தின் பணிபுரிந்தும் ஜனசக்தி இதழ்கள் விரியும் கழித்தார்.
1949 ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அந்த உறுப்பினர்கள் மீதும் அந்த உறுப்பினர்கள் மீது தடை போடப்பட்டது. காமராஜருடைய தீவிர தொண்டனாக மாறி தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1950களில் தொடங்கியது இலக்கிய வாழ்க்கை சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளிவந்தன.
படைப்புகள்:
• ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள
• ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்.
• ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள்.
• ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்.
வாழ்க்கை வரலாறு:
• வாழ்விக்க வந்த சாந்தி 1973.
• ஒரு கதாசிரியனின் கதை.
நாவல் மற்றும் குறுநாவல்கள்:
• வாழ்க்கை அழைக்கின்றது (ஆகஸ்ட் 1957).
• கைவிலங்கு (ஜனவரி 1961).
• பிரம்ம உபதேசம் (மே 1963).
• கருணையினால் அல்ல (நவம்பர் 1965).
• பாரிசுக்கு போ (டிசம்பர் 1966).
சிறுகதை தொகுப்பு:
• ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958).
• இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960).
• மாலை மயக்கம் (ஜனவரி 1962).
• உண்மை சுடும் (செப்டம்பர் 1964).
• சுமைதாங்கி
• பொம்மை
• புகை நடுவினிலே (டிசம்பர் 1990).
சிந்தனை சிதறல்கள்:
“முதலில் எழுதுகிறவன் என்ற முறையில் எதை எழுதுவது என்று தீர்மானிப்பவர் நானே”. ஒரு பாத்திரத்தின் மீது சத்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்கிறார்கள். வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையை புரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள்.
அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்திற்காக கொடிகள் தாள பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும்.
விருதுகள்:
• சாகித்திய அகாதமி விருது.
• 2002 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது.
• 2009 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்காக பத்மபூஷன் விருது.
• ரஷ்ய விருது.
மற்ற எழுத்தாளர்களின் கருத்துகள்:
ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. வேடிக்கை பரப்புவது அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.
இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனால் இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும் அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றது.
பாரதியார் வாழ்ந்த ஓகாலங்களில் மதிக்கப்பட்ட தில்லை. லியோ டால்ய்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளையும் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும் தனித்துவமும் கொண்டவர். ஜெயகாந்தன் ஒரு நீராவி எஞ்சின் போல் ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
விமர்சனம்:
எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சனம் வரிசையில் மண்ணும் மரபும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புவகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார்.
ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார். ரவிசுப்ரமணியன் எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். ஜெயகாந்தன் 08 04 2015 அன்று இரவு 9:00 மணிக்கு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கருத்துகள்
கருத்துரையிடுக