நோயற்ற வாழ்வு
நாமக்கல் கவிஞர்முன்னுரை:
நமது பாரத தேச மக்கள் எத்தகைய ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றும்,தற்காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மக்கள் என்னென்ன இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதை மிக அழகாக தனது கவிதையின் மூலம் எவ்வாறு கூறியுள்ளார் என்பதை கீழ்க்காணும் கட்டுரை மூலம் காணலாம்.
பாரததேசம்: (அன்றைய நிலை)
உலகினிற் சிறந்த தென்றும்
உருவினிற் பரந்த தென்றும்
உயர்தவ யோக சித்தர்
ஒப்பிலார் இருந்த தென்றும்
பலவளம் நிறைந்த தென்றும்
பகுத்தறி வுயர்ந்த தென்றும்....
பகுத்தறி வுயர்ந்த தென்றும்....
கற்பமும் அறிந்து காய
சித்தியும் கற்க மேலோர்
பற்பலர் இருந்த யிந்தப்
பாரத தேச மக்கள்
உடல்வழி மிகுந்து நல்ல
ஊக்கமும் உறுதி பொங்க
உலகினில் இன்ப மெல்லாம்
உயர்வழி அனுப வித்த
திடமுள தீர வீரர்
திகழ்ந்தஇச் சிறந்த நாட்டில்
சிறியதோர் நோய்வந் தாலும்
தாங்கிடத் திறனில் லாமல்
புலபுல வென்று நித்தம்
புதுப்புது நோய்க ளாலே
புழுக்கள்போல் விழுந்து மாண்டு
போவதைக் கண்டு மையோ
விலகிட வழிதே டாமல்
விலங்கினம் போல வாழ்ந்து
விதியென வாதம் பேசி
வீணரா யிருத்தல் நன்றோ?
முற்றிய ஒழுக்கத் தாலும்
முறைதெரி வாழ்க்கை யாலும்
பெற்றவர் காண முன்னாள்
பிள்ளைகள் இறந்த தில்லை ;
கற்றவர் பெரியோர் நித்தம்
கதைகளிற் சொல்லக் கேட்டோம்
இற்றைநாள் கோடி கோடி
பிறக்குமுன் இறப்ப தேனோ?
மணத்தையே விரும்பி யோடி
மலரினைக் கசக்கு வார்போல்
பணத்தையே பெரிதென் றெண்ணிச்
சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
குணத்தையே விலைக்கு விற்றுக்
குரங்கினைக் கொண்டார் போல
இனத்தையே பிணிகள் வாட்ட
இருந்தனம் அறிவி ருந்தும்.
பணியிலும் பணத்தி லேயும்
சுகமெலாம் இருந்தாற் போலப்
பழகினோம் நாமே யன்றிப்
பழக்கினோம் மக்கள் தம்மை.
துணிவிலோம் தூய்மை யில்லோம்
சுசிகர நடத்தை யில்லோம்
துவக்குவோம் இனிமே லேனும்
நோய்களைத் துடைக்கும் வாழ்க்கை
சித்தியும் கற்க மேலோர்
பற்பலர் இருந்த யிந்தப்
பாரத தேச மக்கள்
உலகில் சிறந்த நாடுகளில் ஒன்றானது எங்கள் பாரததேசம். இமயம் முதல் கன்னியாகுமரி வரை பரந்த பரப்பை உடையது எங்கள் பாரத தேசம். ஒப்பில்லாத உயர்ந்த யோக சித்தர்கள் வாழ்ந்த தேசம் எங்கள் பாரத தேசம்.பல வளங்கள் நிறைந்த தேசம், பல சான்றோர் வாழ்ந்த தேசம் எங்கள் பாரத தேசம்.
மூலிகைப் பொருட்களையும் அதனைப் பயன்படுத்தி உயிர் காக்கும் காய சித்தி முறைகளை அறிந்த பலர் வாழ்ந்த நாடு எங்கள் பாரத தேசம்...
பாரத தேசம் : (இன்றைய நிலை)
உடல்வழி மிகுந்து நல்ல
ஊக்கமும் உறுதி பொங்க
உலகினில் இன்ப மெல்லாம்
உயர்வழி அனுப வித்த
திடமுள தீர வீரர்
திகழ்ந்தஇச் சிறந்த நாட்டில்
சிறியதோர் நோய்வந் தாலும்
தாங்கிடத் திறனில் லாமல்
புலபுல வென்று நித்தம்
புதுப்புது நோய்க ளாலே
புழுக்கள்போல் விழுந்து மாண்டு
போவதைக் கண்டு மையோ
விலகிட வழிதே டாமல்
விலங்கினம் போல வாழ்ந்து
விதியென வாதம் பேசி
வீணரா யிருத்தல் நன்றோ?
அற்பமாய் ஆயுள் குன்றி
ஆழ்ந்திடல் ஏனோ வென்று
சொற்பனந் ....
ஆழ்ந்திடல் ஏனோ வென்று
சொற்பனந் ....
உடல் வலிமையாலும் ,நல்ல ஊக்க சக்தியாலும் உலகிற்கே இன்பம் கொடுத்து, ஆரோக்கியமான முறையில் வாழ்ந்த எம் மக்கள் தீர வீரர்களாக திகழ்ந்த இந்த சிறு நாட்டிலே , இன்று என் மக்கள் சிறியதோர் நோய் வந்தால் கூட தாங்கிட திறன் இல்லாமல் தினம் தினம் தோன்றும் புதுப்புது நோய்களுக்கு புழுக்களைப் போல் உயிரை விடக் கூடிய நிலையைப் பார்க்கும்போது என் மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
நோய் என்று தெரிந்தும் விலகிட வழி தேடாமல் அறிவு குன்றிய விலங்கினம் போல வாழ்ந்து வீண் வாதம் பேசி குறைந்த ஆயுளில் இறந்து போகக் கூடிய ஒரு நிலையைக் கண்டு என் மனம் வேதனை அடைகிறது.
நோயுற்ற வாழ்விற்கான காரணம்
முற்றிய ஒழுக்கத் தாலும்
முறைதெரி வாழ்க்கை யாலும்
பெற்றவர் காண முன்னாள்
பிள்ளைகள் இறந்த தில்லை ;
கற்றவர் பெரியோர் நித்தம்
கதைகளிற் சொல்லக் கேட்டோம்
இற்றைநாள் கோடி கோடி
பிறக்குமுன் இறப்ப தேனோ?
மணத்தையே விரும்பி யோடி
மலரினைக் கசக்கு வார்போல்
பணத்தையே பெரிதென் றெண்ணிச்
சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
குணத்தையே விலைக்கு விற்றுக்
குரங்கினைக் கொண்டார் போல
இனத்தையே பிணிகள் வாட்ட
இருந்தனம் அறிவி ருந்தும்.
நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்த நம் முன்னோர்கள் பெற்றோர்கள் காண பிள்ளைகள் இறந்ததில்லை. ஆனால் இன்றோ கற்றறிந்த பல அறிஞர்களின் சொல்லும் கதையைக் கேட்டோம் பிறப்பதற்கு முன்பே எத்தனை எத்தனை இறப்புகள்.
இத்தனை இழப்புகள் எதனால் ,மணத்தை விரும்பி மலரை வீணடிப்பது போல் பணத்தை விரும்பிய வாழ்க்கையை வீணடிக்கின்றனர். குணத்தை விலைக்கு விற்றுவிட்டு குரங்கினம் போல் அங்கும் இங்கும் தாவி உண்டு நம் இனத்தை இன்று நோய்க்கு ஆட்படுத்தி விட்டோம்.
உண்டியில் ஆசை வைத்தோம்
ஒழுக்கமே மறந்து போனோம்
பெண்டுகள் மக்கள் தம்மை
வளர்த்திடும் முறைமை பேணார்
ஒழுக்கமே மறந்து போனோம்
பெண்டுகள் மக்கள் தம்மை
வளர்த்திடும் முறைமை பேணார்
அணியிலே ஆடை யாலே
அலங்கரித் தோமே யன்றி
அறிவிலே ஆசா ரத்தால்
அழகெதும் செய்தோ மில்லை.
அலங்கரித் தோமே யன்றி
அறிவிலே ஆசா ரத்தால்
அழகெதும் செய்தோ மில்லை.
பணியிலும் பணத்தி லேயும்
சுகமெலாம் இருந்தாற் போலப்
பழகினோம் நாமே யன்றிப்
பழக்கினோம் மக்கள் தம்மை.
உணவிலும் ,ஆடை ,ஆபரணங்களிலும், பணத்திலும், பணியிலும், ஆசை வைத்து ஒழுக்கத்தை மறந்து சுகம் எல்லாம் இழந்து பெண்களை வளர்க்கக் கூடிய முறைகளை முறையாக கடைபிடிக்காமல் நோய் உடைய வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..
மண்டையி லெழுத்தி தென்று
மயங்கினோம் கர்மந் தன்னை
மண்டின நோய்கள் சஷாமம்
மலிந்திட நலிந்தோ மையோ!
மயங்கினோம் கர்மந் தன்னை
மண்டின நோய்கள் சஷாமம்
மலிந்திட நலிந்தோ மையோ!
பிணியிலே பிறந்து நித்தம்
பிணியையே அருந்திப் பொல்லாப்
பிணியிலே வளர்ந்தும் அந்தப்
பிணியினாற் சாகக் கண்டும்
பிணியையே அருந்திப் பொல்லாப்
பிணியிலே வளர்ந்தும் அந்தப்
பிணியினாற் சாகக் கண்டும்
இத்தகைய நோயற்ற வாழ்விற்கு காரணம் என்ன என்று ஆராயும் பொழுது விதி என்று மடமையாகப் பேசி, நோய் உடனே பிறந்து, நோய் உணவை உண்டு, நோயுடன் வளர்ந்து கடைசியில் அந்த நோயுடன் இறப்பதை காண்கின்றோம் ..
நடைபிணம் போல நாமும்
நாள்கழித் திருந்தோ மையோ
நாடிலோம் இதனை மாற்ற
நல்வழி யென்ன வென்று
நாள்கழித் திருந்தோ மையோ
நாடிலோம் இதனை மாற்ற
நல்வழி யென்ன வென்று
மடமையோ மதியோ அன்று
விதியெனும் மயக்கந் தானோ
மாற்றநாம் அல்ல தென்றால்
மதியினாற் பயந்தா னென்னே?
விதியெனும் மயக்கந் தானோ
மாற்றநாம் அல்ல தென்றால்
மதியினாற் பயந்தா னென்னே?
துணிவிலோம் தூய்மை யில்லோம்
சுசிகர நடத்தை யில்லோம்
துவக்குவோம் இனிமே லேனும்
நோய்களைத் துடைக்கும் வாழ்க்கை
இத்தனை நாட்களாக நடைபிணம் போல் நோயுடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம். இனி வரும் காலங்களில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விதி என்னும் மடமை பேச்சை தூக்கி எரிந்து அறிவுடன் பாரத தேச மக்கள் அனைவரும் துணிவோடும், தூய்மையையோடும், ஒழுக்கமான நடத்தை யோடும், இனிமேலாவது துவங்குவோம் நோயற்ற வாழ்வை .
கருத்துகள்
கருத்துரையிடுக